அனைத்து சூழலிலும் வெற்றி பெற விரும்பும் இந்தியாவின் அடையாளமே சந்திரயான்-3 -பிரதமர் மோடி பெருமிதம்…

அனைத்து சூழலிலும் வெற்றி பெற விரும்பும் இந்தியாவின் அடையாளமாக சந்திரயான்-3 திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 104ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் இறங்கி மூன்று நாட்களுக்கு…

அனைத்து சூழலிலும் வெற்றி பெற விரும்பும் இந்தியாவின் அடையாளமாக சந்திரயான்-3 திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

104ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் இறங்கி மூன்று நாட்களுக்கு மேலாகியும் அதன் வெற்றி கொண்டாட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து சூழலிலும் வெற்றி பெற விரும்பும் இந்தியாவின் அடையாளமாக சந்திரயான் – 3 திட்டம் மாறியுள்ளது என்றும், எந்த சூழ்நிலையிலும் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை நாம் அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சந்திரயான்-3 திட்டத்தில் பல பெண் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக பிரதமர் கூறினார். மேலும், செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தயாராகி வருவதாக கூறிய அவர், இந்தியாவின் திறனை உலக நாடுகள் காணப்போகிறது என குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.