ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 லட்சம் பறிமுதல்

ஒசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ரெய்டு மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், கணக்கில் வராத சுமார் 5 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டின் எல்லை மற்றும் இரு தொழிற்பேட்டைகளான சிப்காட் நகரமாக ஒசூர்…

ஒசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ரெய்டு மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், கணக்கில் வராத சுமார் 5 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டின் எல்லை மற்றும் இரு தொழிற்பேட்டைகளான சிப்காட்
நகரமாக ஒசூர் மாநகராட்சி விளங்குகிறது. தொழிற் வளர்ச்சியில் புதிய உச்சத்தையும், வளர்ந்து வரும் நகரங்களில் ஆசியாவிலேயே 4-வது இடத்திலும் உள்ள ஒசூரில்  நிலத்தின் மதிப்பு
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நாள்தோறும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் பதிவு செய்யும் பணி நடைபெறுகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி
வடிவேல் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் ஒசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கட்டுக்கட்டாக கணக்கில் வராத 5 லட்சத்து 4880 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பொறுப்பு சப் – ரிஜிஸ்டர் சகிலா பேகம் மற்றும் புரோக்கர் மருது ஆகியோரிடம லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.