வியட்நாம் படகு விபத்து – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வியட்நாம் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்தோர் உடல்கள் தாயகம் திரும்புவதற்கும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நலம்பெறச் செய்யவும் வியட்நாம் நாட்டு அரசுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.