#VidaaMuyarchi திரைப்படத்தின் 2 புதிய போஸ்டர்களை வெளியீடு!

’விடாமுயற்சி‘ படத்தில் நடிகர்கள் கணேஷ் சரவணன், தசரதி ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார்.…

’விடாமுயற்சி‘ படத்தில் நடிகர்கள் கணேஷ் சரவணன், தசரதி ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.

அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முடிந்தது.

இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதோடு மொத்த ஷூட்டிங்கும் முடியவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் அஸர்பைஜானுக்கு ஒருவாரம் ஷூட்டிங் செல்ல வேண்டும் என இயக்குனர் மகிழ் திருமேனி கூறியுள்ளாராம்.
ஆனால் எப்படியும் விடாமுயற்சி படத்தைத் தீபாவளிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளது.  இந்நிலையில், விடாமுயற்சி‘ படத்தில் நடிகர்கள் கணேஷ் சரவணன், தசரதி ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.