2 லட்சத்தி 60 ஆயிரம் ஓட்டு பெற்றதால் 20 அடி 6 இஞ்ச் நீள அரிவாள் செய்து மாரநாடு
கருப்பண சாமிக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில்
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் தன்னை எதிர்த்துப்
போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தேவநாதனைவிட சுமார் 2 லட்சத்தி 60 ஆயிரம்
வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அவர் மானாமதுரையை அடுத்த திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கருப்பசாமிக்கு நேர்த்திக்கடனைச் செலுத்தினார். இதில் 2 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றதால் 20 அடி 6 இஞ்ச் உயரம் கொண்ட பிரம்மாண்ட அரிவாளைத் தயார் செய்து இன்று நேரடியாகவே கோவிலுக்குச் சென்று தனது கையாலேயே நிறுவி தனது நேர்த்திக்கடனைச் செலுத்தினார்.







