#VettaiyanRelease | ‘வேட்டையன்’ ரிலீஸ் எப்போது? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்குப் பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இதில் நடிகர்…

வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்குப் பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்தி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.

இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா தகுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை,மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வந்தது. இந்த சூழலில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில வாரங்களுக்கு முன் முடிந்தது.

படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வேட்டையன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா ஆகிய மொழிகளில் அக்டோபர் 10ம் தேதி வெளியாகுகிறது. சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.