கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர்…

தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 12-ம் தேதி முதல் விண்ணப்பதிவு தொடங்கியது. இந்த படிப்புகளுக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதால் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து அடுத்த மாதம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு லந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்புக் கலந்தாய்வு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு மாணவர்கள், தொழில்நுட்ப படிப்புகளில் சேரும் மாணவ-மாணவிகள் ஆகியோருக்கு மட்டும் நேரடியாக நடைபெற உள்ளது. மற்ற அனைத்து பாடங்களுக்கும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவில் மாணவர் ராகுல்காந்த், மாணவி கனிமொழி 200 மதிப்பெண் பெற்று முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளனர். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேலம் மாணவர் விக்னேஷ், பெரம்பலூர் மாணவர் அஜய் ஆகியோர் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளனர். மாணவர்கள் http://www.adm.tanuvas.ac மற்றும் tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் தரவரிசைப் பட்டியலை அறிந்துகொள்ளலாம்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.