நடிப்பில் மிரட்டிய சிம்பு ; ரசிகர்கள் ரிவியூவ்

சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியானது. தமிழ்நாட்டில் சுமார் 500 தியேட்டர்களில் இன்று ரிலீசான இந்த படத்திற்கு தற்போது விமர்சனம் வெளியாகி வருகிறது. திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள்…

சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியானது. தமிழ்நாட்டில் சுமார் 500 தியேட்டர்களில் இன்று ரிலீசான இந்த படத்திற்கு தற்போது விமர்சனம் வெளியாகி வருகிறது. திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை தொகுத்துத் தருகிறோம்.

ரேவந்த் என்பவரின் ட்வீட் பதிவில், சிம்பு நடித்த திரைப்படங்களில் மிகச் சிறந்த திரைப்படம் இது என தெரிவித்தார்.

https://twitter.com/revanthoffl_/status/1570252655729184769

அஸ்வத் என்பவரின் பதிவில் முத்துவின் வாழ்க்கை பயணத்தை மொத்தமாக காட்டும் படமாக உள்ளதால் சிம்புவை மறந்து 100 சதவீதம் முத்துவாக மாறியுள்ளார். இதனால் ரசிகர்கள் கதைக்குள் மூழ்குவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் என தெரிவித்தர்.

https://twitter.com/aswathofficial/status/1570261013316136962

இதற்கு பதில் ட்வீட் அனுப்பிய ரசிகர்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மல்லிப்பூ பாடல் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும் எனவும்,  இந்த படத்தின் சிம்புவின் உடல் மொழி, ஆக்‌ஷன், பின்னணி பாடல்கள் அனைத்தும் எதிர்பாராதா விருந்தாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

ஷக் கோலின் என்பவரின் பதிவில் கவுதவ் வாசுதேவ் மேனனுக்கு வழக்கத்திற்கு மாறான திரைப்படமாக உள்ளது. முத்துவாக சிம்புவின் கலகலப்பான வாழ்க்கை பயணமாக உள்ளதால் மாஸ் விஷயங்களை இந்த படத்தில் எதிர்பார்க்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

https://twitter.com/zaccollin2/status/1570215767341436930

ரகுநாதன் என்பவரின் பதிவில் படத்தின் இரண்டாம் பாதி மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது. இன்டெர்வல் மற்றும் கிளைமாக்ஸ் இரண்டுமே குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.