பெரிய வியாழனை முன்னிட்டு புகழ் பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று திருப்பலி நிறைவேற்றினர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு மரிந்த காலத்தை உலக முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். கிஸ்தவர்கள் தவக்காலமான 40 நாட்கள் ஜெபம், தானம் தவம் செய்து இறைவனின் ஆசியை வேண்டி வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலில் பெரிய வியாழனை ஒட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் இறை வார்த்தை, நற்கருணை வழிபாடு மற்றும் இடமாற்ற பவனியை பேரலாய அதிபர் இருதயராஜ் நிறைவேற்றினார். இதனை தொடர்ந்து 12 சீடர்களின் பாதங்களை கழுவ செய்து தஞ்சை மாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் முத்தி செய்தார். இந் நிகழ்வில் ஏராளமான கிஸ்தவர்கள் பங்கேற்று பிரத்தனை செய்தனர். இந்நிலையில் நாளை புனித வெள்ளியையும், ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையும் உலக எங்கிலும் உள்ள கிறித்தவர்கள் கொண்டாட உள்ளனர்.
—கோ. சிவசங்கரன்







