2000 ரூபாய் கொரோனா நிவாரண உதவியை சிரித்த முகத்துடன் பெற்றுக் கொண்டு பிரபலமான நாகர்கோவில சேர்ந்த வேலம்மாள் பாட்டி இன்று காலமானார். அவருக்கு வயது 87.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அருகே உள்ள கலுங்கடியை
சேர்ந்தவர் வேலம்மாள் பாட்டி. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த
நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொரானா தொற்றின் போது தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்கியது.
வேலம்மாள் பாட்டி ரேஷன் கடையில் நிவாரண தொகையை பெற்றபோது சிரித்தபடி போட்டோவிற்கு போஸ் கொடுத்த படம் தமிழகம் முழுவதும் பிரபலமானது. இதன் பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலம்மாள் பாட்டி சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் தமிழக முதலமைச்சரின் திட்ட விளம்பரங்களில் இடம் பிடித்தார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வேலம்மாள் பாட்டு உடல்நிலை சரியில்லாமல் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் வயது மூப்பு காரணமாக இன்று அவர் உயிரிழந்தார். இவருக்கு பலரிம் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.







