காய்கறிகள் அதிக விலைக்கு விற்பதாக எந்த புகாரும் வரவில்லை; அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

காய்கறிகள் அதிக விலைக்கு விற்றது தொடர்பாக, இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தளர்வற்ற முழு ஊரடங்கையொட்டி, கோவையில் நடமாடும் காய்காறி…

காய்கறிகள் அதிக விலைக்கு விற்றது தொடர்பாக, இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


தளர்வற்ற முழு ஊரடங்கையொட்டி, கோவையில் நடமாடும் காய்காறி வாகனங்களை, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைத்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி முழு ஊரடங்கையொட்டி கோவை மாநகராட்சி சார்பில், 401 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள், இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.


மேலும், காய்கறி வாகனங்கள் ஓட்டுவதற்கு, யார் அனுமதி கேட்டாலும், அனுமதி வழங்கப்படும், என்றும் அவர் கூறினார். ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகளிலிருந்து, வீடுகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்வது குறித்து, இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை, என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.