மாஸ் அப்டேட் கொடுத்த #Vettaiyan படக்குழு – அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் அறிமுகம்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன்…

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதனிடையே வேட்டையன் திரைப்பட கதாபாத்திரங்களை படக்குழு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர்களில் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்தது. அந்த வகையில் இன்று அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.

இப்படத்தில் அமிதாப் பச்சன் ‘சத்யதேவ்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் படங்களில் சத்யா என்ற பெயரில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வெற்றிப் பெற்றவையே. அந்த வகையில் இந்த சத்யதேவ் கதாபாத்திரமும் மாஸாக இருக்குமா என்பதை பொருந்திருந்தே பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.