பாடலாசிரியர்களுக்கு திருமா அழைப்பு!

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளைக் கருப்பொருளாகக் கொண்ட வாழ்த்துப் பாடல்கள் தேவை என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தமது டுவிட்டர் பக்கத்தில்த தொண்டர்களுக்கு கோரிக்கையாக விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், கட்சி…

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளைக் கருப்பொருளாகக் கொண்ட வாழ்த்துப் பாடல்கள் தேவை என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தமது டுவிட்டர் பக்கத்தில்த தொண்டர்களுக்கு கோரிக்கையாக விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், கட்சி மாநாடுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் தொடக்கம் மற்றும் நிறைவில் இசைப்பதற்கென தனித் தனியே இரு பாடல்கள் தேவை. இவை பாவலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. அவற்றில் இரண்டு பாடல்கள் தேர்வு செய்யப்படும்.  பாவலர் அறிவுமதி அவர்களின் தலைமையில் தேர்வுக்குழு அதிகாரப்பூர்வமாக அமைக்கப்படும்.

பாடல்கள் மற்றும் தேர்வு குறித்த வரையறைகள் பின்னர் அறிவிக்கப்படும். ஜூன்-30 க்குள் பாடல்கள் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரி அறிவிக்கப்படும என குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு ஏன் என விடுதலை சிறுத்தைகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, இளம் தலைமுறையினரை பொறுத்தவரை, இனம் , மொழி கடந்து இசையை ரசிக்கும் பண்பு அதிகமாக உள்ளது. அவர்களிடையே விடுதலை சிறுத்தைகளின் கொள்கைகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக பாடல்களை அவர்களே எழுதும்போது, விடுதலை சிறுத்தைகளின் கொள்கைகள் தாமாக மனதில் பதியும். நாம் யார் ? நாம் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன ? என்பதும் மனதில் பதியும். அதற்கு சமீபத்திய உதாரணம் கமலஹாசன் நடித்து வெளிவரவுள்ள விக்ரம் திரைப்படத்தில், ’பத்தல பத்தல’ என்ற பாடலாகும். அதில்,, ’கஜானாலே காசில்ல, கல்லாலையும் காசில்ல… காய்ச்சல் ஜூரம் நிறையா வருது, தில்லாலங்கடி தில்லாலே… ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே… சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே’ என மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

இந்த திரைப்படம் திரைக்கு வரும்முன்பே, அப்பாடல் வரிகள் கமலின் மக்கள் நீதி மய்ய தொண்டர்களிடையே மிகவும் பிரபலமாக விட்டது. இதுபோல் அதுபோல் அரசியல் சார்ந்த கருத்துகளை கொண்டு செல்ல இசை பல்வேறு காலகட்டங்களில் பெரும் உதவியாக நின்றுள்ளது.  துவண்டு கிடக்கும் இளைஞர்களை தட்டி எழுப்ப தற்போது வைக்கப்பட்டுள்ள பாடல் எழுதும் போட்டி பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.