புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைப்பு!

புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை 2 சதவிகிதம் குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால்…

புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை 2 சதவிகிதம் குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களிலும் பெட்ரோல்- டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டதாகவும், தற்போது பொதுமக்களின் நலன் கருதி, வாட் வரி விகிதத்தை 2 சதவீதமாகக் குறைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக புதுச்சேரியின் அனைத்து பிராந்தியங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் நாற்பது காசுகள் அளவு குறைய வாய்ப்புள்ளது, மேலும் இந்த வரி குறைப்பால் ஆண்டுக்கு 71 கோடி ரூபாய் வரை மக்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.