ஸ்ரீவைகுண்டம் அருகே VAO தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதிச்சநல்லூரில் கிராம நிர்வாக அலுவலகராக லூர்து பிரான்சிஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலையில்…

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆதிச்சநல்லூரில் கிராம நிர்வாக அலுவலகராக லூர்து பிரான்சிஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலையில் அவர், ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், லூர்து பிரான்சிஸை கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், அவருக்கு கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, லூர்து பிரான்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, விஏஓ தாக்ககப்பட்டதைக் கண்டித்து, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.