வசந்தபாலன் படத்தில் இணைந்த வனிதா விஜயகுமார்

வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். ‘வெயில்’, ‘அங்காடி தெரு’, ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’ உள்பட சில படங்களை இயக்கிய வர் வசந்தபாலன். இப்போது, இசை அமைப்பாளர்…

வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

‘வெயில்’, ‘அங்காடி தெரு’, ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’ உள்பட சில படங்களை இயக்கிய வர் வசந்தபாலன். இப்போது, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘ஜெயில்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந் த நிலையில் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

இந்நிலையில் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து  ‘அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்’ என்னும் நிறுவனம் மூலம் பெயரிடப்பாத படத்தை தயாரித்து இயக்கி வருகிறார்.

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கி றார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் இப்போது வனிதா விஜயகுமார் இதில் இணைந்துள்ளார். கதையோட்டத்திற்கு வலுசேர்க்கும் கேரக் டரில் அவர் நடிக்க இருக்கிறாராம். அவருடன் நடிகர் அர்ஜுன் சிதம்பரமும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.