கோவை அன்னூரை சேர்ந்த அமுல் கந்தசாமி (வயது.60) வால்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இவர் உடலநலக்குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்து வந்தது.
இந்த நிலையில் அமுல் கந்தசாமி இன்று (ஜூன் 21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு அப்பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமுல் கந்தசாமி கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







