வள்ளலார் அனைவருக்கும் பொதுவானவர் என பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு நயினார் நாகேந்திரன் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி சனாதான விஷயங்களை தான் கூறியுள்ளார். ஏற்கனவே நடந்த விஷயங்களை கோடிட்டு காட்டியுள்ளார்.
வேறு எந்த சிந்தனையோடும் அவர் உரை அமையவில்லை. வள்ளலார் எல்லோருக்கும் பொதுவானவர். அவரது வழிகாட்டுதல் என்பது எல்லா மக்களுக்கும் பொருத்தமானது. எல்லா மக்களும் கடைபிடிக்க கூடியவர் வள்ளலார்
சனாதனம் குறித்து பலர் சர்ச்சையாக பேசி வருகின்றனர். சனாதனம் குறித்து கேட்டால் அவர்களுக்கு விளக்கம் சொல்ல தெரியவில்லை. இந்த உலகத்தில் எதுவும் நிலை இல்லாதது. நிலையில்லாத உலகத்தில் நிலையான கருத்துக்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்.
சனாதனம் இந்து மதத்தை சார்ந்திருப்பதாகவும் மற்ற மதத்திற்கு எதிரான கருத்தாகவும் சொல்லப்படுகிறது. அது தேவையில்லாத சிந்தனை. தேவையில்லாத கருத்துக்களை மக்கள் மனதில் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆளுநர் என்ன வார்த்தைகளை பயன்படுத்தினார் என்பது தெரியாது” என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.



