முக்கியச் செய்திகள் சினிமா

வலிமை அப்டேட்: அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்!


வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தினை இயக்குநர் வினோத் இயக்கிவருகிறார். மிக பெரிய பட்ஜெட்டில் போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் கதாநாயகியாக ஹுமா குரேஷி மற்றும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். நீண்ட நாட்களாக வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிட வேண்டுமென ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்களிடம் கூட வலிமை அப்டேட்டை ரசிகர்கள் கேட்ட வீடியோ வைரலானது. 

ஒருவழியாக மே 1ம் தேதி அஜித்தின் 50வது பிறந்தநாள் அன்று ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனவும், அன்று முதல் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். படக்குழுவினரின் இந்த அறிவிப்பு, அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். 

இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் நிறுவனத்தில் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் மே 1ம் தேதி அஜித்குமாரின் 50 வது பிறந்தநாளை  முன்னிட்டு  வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவதாக கூறியிருந்தோம். அந்த அறிவிப்பு வெளிவரும்போது கொரோனா இரண்டாவது அலை வரும் என்றோ, அதன் தாக்கம் சுனாமி போல இருக்கும் என்றோ எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரத்தை இழந்து உற்றார், உறவினர் உயிரிழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்திருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார். 


மேலும், இந்த அசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புராஜக்ட்ஸ், படத்தில் நடித்துள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்துள்ள முடிவின்படி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றுமொரு  தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.  நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலனுக்காகவும், பாதுகாக்கவும் பிரார்த்திப்போம் என்று கூறினார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

விசாரணை நடந்தபோது நீதிபதியை தாக்கிய போலீஸ்: துப்பாக்கியால் மிரட்டியதால் அதிர்ச்சி

Halley Karthik

திரிபுராவில் கைது செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர்களுக்கு ஜாமீன்

Ezhilarasan

சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலமாக தமிழகம் உருவாக்கப்பட்டுள்ளது: முதல்வர்!

Halley Karthik