பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் லாஸ் ஏஞ்சல்ஸில் உயிரிழந்ததாக அவரது மகள், நடிகை மெர்சிடிஸ் கில்மர் தெரிவித்துள்ளார். பன்முகத் திறன் கொண்ட வால்மர், பேட்மேன் ஃபாரெவர் , தி செயிண்ட் , டாப் சீக்ரெட், வில்லோ , தி டோர்ஸ் , ரியல் ஜீனியஸ் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
நிமோனியா மற்றும் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த வால் கில்மர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான டாப்கன் மேவ்ரிக் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் வால் கில்மர்.








