எஸ். ஜே. சூர்யா நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான வதந்தி இணையத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாம் பாகம் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.
ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கியுள்ள இந்த தொடரில் நடிகர் சசிகுமார் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எட்டு எபிசோட்கள் கொண்ட இத்தொடரானது, புஷ்கர் மற்றும் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகவும், வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
இந்த நிலையில் வதந்தி சீசன் 2 – வின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.




