#UttarPradsh : ரயில்வே டிராக்கில் குடை பிடித்தபடி அசந்து தூங்கிய நபரால் பரபரப்பு!

உத்தர பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் குடையுடன் ஒரு நபர் படுத்து உறங்கிய நிகழ்வு நடந்தேரியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் ஒரு நபர் குடையுடன் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது.இந்த நிலையில் ரயில் லோகோ…

உத்தர பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் குடையுடன் ஒரு நபர் படுத்து உறங்கிய நிகழ்வு நடந்தேரியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் ஒரு நபர் குடையுடன் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது.இந்த நிலையில் ரயில் லோகோ பைலட் தூரத்திலிருந்த போதே யாரோ ஒருவர் தண்டவாளத்தில் படுத்திருப்பதை பார்த்ததும் சுதாரித்து கொண்டு ரயிலை நிறுத்தினார்.

இதையும் படியுங்கள் : “முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.50,000 வழங்கப்படும்!” – #Sikkim முதலமைச்சர் அறிவிப்பு!

அதன் பிறகு, ரயிலை நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்ற லோகோ பைலட் தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பினார்.பின்னர் அவரை ரயில்வே போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பிறகு அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. ரயில் தூரத்தில் வரும்போதே தண்டவாளத்தில் ஏதோ இருப்பதைக் கண்ட ஓட்டுநர், ரயிலை நிறுத்தி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.