உத்தரகாண்ட்டில் சுற்றுலா பயணிகள் சென்ற கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 11 பேர் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் ராம் நகர் பகுதியில் பின்னர் ஒரு தனியார் விடுதியில் தங்கிவிட்டு தேலா ஆற்றின் குறுக்கே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அவர்கள் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ஏற்கனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் எல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது. சாலையில் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் ஆற்றில் அடித்து செல்ப்பட்டது. இதில் காரில் இருந்த 9 பேர் உயிரிழந்தனர். இருவர் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். மேலும் தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு குழுவினரும் இந்த மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். கிரேன் மூலம் ஆற்றில் இருந்து கார் வெளியே எடுக்கப்பட்டது. 11 பயணிகளில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்ததை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
https://twitter.com/PMOIndia/status/1545296389982273537
இந்த விபத்து குறித்து குமாவோன் ரேஞ்ச் டிஐஜி நிலேஷ் ஆனந்த் கூறுகையில், இறந்த அனைவரையும் அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது. உயிருடன் மீட்கப்பட்ட ஒரு சிறுமி ராம்நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.
மேலும், இந்த ஆற்றில் பாலம் கட்டுவது குறித்து நிர்வாகத்திடம் ஆலோசித்து வருவதாகவும், கடந்த காலங்களில் இங்கு இதுபோன்ற விபத்துகள் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், நைனின்டால் மாவட்டத்தில் கார் ஆற்றில் அடித்து செல்லபட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.







