டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் நேற்று 153 மில்லி மீட்டர் மழை பதிவானது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் கங்கை உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நிலச்சர்வு காரணமாக சாலைகள் துண்டிக்ப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராம்கர் கிராமத்தில் வெள்ளம் பாய்ந்தோடும் நதியை கடக்க பேருந்து ஒன்று முயன்றது. ஆனால் நதியை கடக்க முடியாமல் பேருந்து பாதியிலேயே நின்றது.இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து குதித்து வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.






