முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

பாம்பை ஏவி மனைவியை கொன்ற கொடூரக் கணவருக்கு இரட்டை ஆயுள்

கேரளாவில் பாம்பை ஏவி மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர் சூரஜ் ( 27 ) என்பவர் தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்தார். இவர் மனைவி உத்ரா ( 22). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. திருமணத்தின் போது உத்ராவின் பெற்றோர் 784 கிராம் நகைகள் மற்றும் ஒரு காரை வரதட்சணையாக கொடுத்தனர். இந்த நிலையில் சூரஜ் 2-வது திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் 2 ம் தேதி, அடூரில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு வெளியே உத்ராவை ஒரு பாம்பு கடித்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏப்ரல் 22 அன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெற்றோருடன் கொல்லம் அருகில் உள்ள அஞ்சாலில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில் மே 7- ஆம் தேதி காலை, உத்ரா தனது பெற்றோர் வீட்டில் படுக்கைய றையில் பிணமாக கிடந்துள்ளார். உத்ராவின் தந்தை விஜயசேனன் தாய் மணிமேகலை, தங்கள் மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் உத்ரா, விஷ பாம்புக் கடித்து இறந்து விட்டதாக கூறினர். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, படுக்கையறையில் விஷபாம்பை கண்டனர். பாம்பை கொன்று புதைத்தனர். பின்னர், மகள் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக உத்ராவின் பெற்றோர்கள் போலீசில் புகாரளித்தனர். போலீசார் சூரஜிடம் விசாரித்தபோது, பல திடுக் தகவல்கள் வெளியாயின.

வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் உறுப்பினராக இருக்கும் சூரஜ், பாம்பு பிடிப்பவரான சுரேசை தொடர்பு கொண்டு பாம்பை வாங்கியுள்ளார். முதல் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து இரண்டாவது முறைம் வாங்கி உத்ரா வீட்டிற்கு கொண்டு சென்று மனைவி மீது வீசி உள்ளார். பாம்பு, அவரை இரண்டு முறை கடித்துள்ளது. இதையடுத்து விஷம் ஏறி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த குற்றத்தை ’அரிதிலும் அரிது’ என்ற நீதிபதி மனோஜ், இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தார்.

Advertisement:
SHARE

Related posts

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் விநியோகம் தொடக்கம்!

Halley karthi

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ விபத்து

Gayathri Venkatesan

மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது டெல்லி அணி!

Halley karthi