கங்குவா படத்தின் ‘உதிரன்’ லுக் வெளியானது…!

‘கங்குவா’ படத்தில் பாபி தியோலின் கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து…

‘கங்குவா’ படத்தில் பாபி தியோலின் கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்து வருகிறார்.

உலகளவில் 38 மொழிகளில் ‘கங்குவா’ வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தன. ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அடுத்தாண்டு மத்தியில் திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ராமரிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி..! – திருச்சியில் திருமாவளவன் எம்.பி. விமர்சனம்

ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், அண்மையில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த பாபி தியோல்,  ‘உதிரன்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாபி தியோல் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவரது ‘உதிரன்’ கதாபாத்திரத்தின் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பாபி தியோலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, அவரது கதாபாத்திரம் இடம்பெற்றுள்ள போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

https://twitter.com/StudioGreen2/status/1751115316493758482

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.