உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளை (ஜன.10) வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சாலைகளிலும், மலை ரயில் பாதையிலும் ஆங்காங்கே மரங்கள் விழுவதுடன், மண்சரிவும் ஏற்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே நேரத்தில் உதகை- குன்னூர் இடையேயான மலை ரயில் வழக்கம் போல இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







