பட்டமளிப்பு விழாவில் கால் இடறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்காவில் விமானப்படை பயிற்சி அகாடமி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இந்த…

அமெரிக்காவில் விமானப்படை பயிற்சி அகாடமி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார். 81 வயதான அவர் விமானப்படை வீரர்களுக்கு சான்றிதழ் அளிக்க எழுந்த போது, மேடையில் கால் தவறி கீழே விழுந்தார்.

உடனடியாக அருகிலிருந்து விமானப் படை ஊழியர்கள் பைடனை தூக்கினர். பின்னர், அதிகாரிகளின் உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்தார். இந்த சம்பவம் நிகழ்ச்சியின் நடுவே பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வை தொடர்ந்து, விழாவில் அதிபர் ஜோ பைடன் விமானப்படை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டமளித்ததுடன், கைகுலுக்கி பாராட்டும் தெரிவித்தார்.

விழா மேடையில் போடப்பட்டிருந்த மணல் மூட்டை ஒன்றை மிதித்தபோது கால் தடுமாறி அதிபர் ஜோ பைடன் கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை, அவர் நலமாக உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.