ஜி20 மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.
டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில்ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக டெல்லியில் 1 லட்சத்து 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது…
ஜி20 மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த வெளிநாட்டு பிரதிநிதிகள், தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கலைஞர்களை கொண்டு நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.