ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி கடந்த 2019-இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது
இந்தியாவில் அக்டோபா 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த முறை இறுதி ஆட்டத்தில் மோதிய இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் அக். 5-ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன.
இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. Book my show தளத்தில் உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை புக் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனைக்காக வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.