அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரலாற்றில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் போலந்து வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் இகா ஸ்வியாடெக்.
21 வயதாகும் ஸ்வியாடெக், மகளிர் ஒற்றயைர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலாவை 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு போலந்து வீராங்கனை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.
முன்னதாக, பரபரப்பாக நடைபெற்ற முதல் செட் ஆட்டத்தை ஸ்வியாடெக் தனது திறமையான ஆட்டத்தால் 6-3 என்ற கணக்கில் வென்றார். சுதாரித்துக் கொண்ட பெகுலா, இரண்டாவது செட் ஆட்டத்தை விட்டுக் கொடுக்காமல் விளையாடினார். இரு வீராங்களும் போட்டி போட்டிக் கொண்டு மல்லுக்கட்டியது ரசிகர்களை இருக்கையின் விளிம்புக்குக் கொண்டு வந்தது.
எனினும், அந்த செட் 7-6 என்ற கணக்கில் டை பிரேக் ஆனது. இதையடுத்து, நடைபெற்ற டை பிரேக்கர் ஆட்டத்தில் 7-4 என்ற கணக்கில் ஸ்வியாடெக் அசத்தினார். அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை ஆரினா சபலென்காவை நாளை எதிர்கொள்கிறார்.
இகா ஸ்வியாட்டெக் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் 2020, 2022இல் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார் ஸ்வியாடெக். இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலும் அரையிறுதி வரை முன்னேறினார்.