நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகை மீண்டும் வழங்கப்பட வேண்டும்-முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையினை மீண்டும் வழங்க முதல்வர் ஸ்டாலின்  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார். இதுகுறித்து மதுரையில் அவர் கூறியதாவது: ஏழை, எளிய மக்களுக்கு முதியோர் உதவித்…

நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையினை மீண்டும் வழங்க முதல்வர் ஸ்டாலின்  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார்.

இதுகுறித்து மதுரையில் அவர் கூறியதாவது:

ஏழை, எளிய மக்களுக்கு முதியோர் உதவித் தொகை உதவிகரமாக இருந்தது. அதிமுக ஆட்சியில் ஒரே அரசாணையில் கூடுதலாக 5 லட்சம் முதியோர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் 35 லட்சம் முதியோர்களுக்கு 4,300 கோடி அளவில் முதியோர் உதவித் தொகை வழங்கப்படுகின்றது. தமிழக அரசு சம்பந்தம் இல்லாத நிபந்தனைகளைக் கூறி முதியோர்களுக்கு உதவித் தொகையை நிறுத்தி உள்ளது.

திமுக அரசு முதியோர் உதவித் தொகையினை நிறுத்துவது மிக ஆபத்தானது, அபாயகரமானது. திமுக தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்தது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது வாக்குறுதியை அமல்படுத்தாமல் முதியோர் உதவித் தொகையினை நிறுத்தி வருகிறது. முதியோர் உதவித் தொகை நிறுத்தப்படுவது முதல்வரின் கவனத்திற்கு சென்றதா? என தெரியவில்லை.

முதியோர் உதவித் தொகை விவகாரத்தில் முதல்வர் தனிக் கவனம் செலுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையினை மீண்டும் வழங்க முதல்வர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உதயகுமார் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.