நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தயார் நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில் சென்னையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில் சென்னையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் பதிவான வாக்குகள் நளை 268 மையங்களில் எண்ணப்படுகிறது. சென்னையில் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,

சென்னையில் 2,400 அலுவலர்கள் 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். தாம்பரம் மற்றும் ஆவடியில் 1,200 போலீசார் என மொத்தம் 7,200 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படுகிறது. வாக்கு சாவடி முகவர்கள் 7 மணிக்கு வர வேண்டும்.

வேட்பாளர்கள், முகவர்கள் செல்போன்களுடன் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். தலைமை முகவர் முன்னிலையில் சீல் பிரிக்கப்படும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் வார்டுகள் வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்படும்.

காலை 8.30 மணிக்கு 10-14 மேஜைகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணிப்படும். வார்டு வாரியாக எண்ணிக்கை முடிந்தவுடன் ஒலி பெருக்கி வாயிலாக முடிவுகள் தெரிவிக்கப்படும்.

ஒரு அறையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருடன் 3 நுண் பார்வையாளர்கள் இருப்பார்கள். தபால் வாக்கு எண்ணும் மேஜையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருடன் வேட்பாளர் அல்லது தலைமை முகவர் ஒருவர் அனுமதிக்கப்படுவர்.

அனுமதிக்கப்படும் நபர்கள் படிவம் எண் 24 உடன் வர வேண்டும். முகவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டுதான் உள்ளே வர வேண்டும். 14,000க்கும் மேற்பட்ட தபால் வாக்குகள் சென்னையில் அலுவலர்களுக்கு அனுப்பியதில் 6,867 தபால் வாக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளது.

வார்டு வாரியாக முடிவுகள் வெளியிடுவதன் மூலம் குழப்பம் தவிர்க்கப்படும். வெற்றி/தோல்வி முடிவுகள் மட்டும் வெளியிடப்படும் என ககன்தீப் சிங் பேடி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.