31.3 C
Chennai
April 24, 2024
தொழில்நுட்பம்

வாட்ஸ்அப்பில் புதிய எமோஜிக்கள்! செயலியை உடனே அப்டேட் செய்யுங்க..

தகவல்தொடர்பு என்பது போன் வந்த பிறகு மிகவும் எளிமையானது. போனில் பேசுவது மட்டுமல்லாமல் எழுத்து வடிவிலும் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் எஸ்எம்எஸ் வசதி வந்தது.

இதைத்தொடர்ந்து ஸ்மார்ட்போன் வந்தது. ஸ்மார்ட்போனின் வருகைக்குப் பிறகு செயலிகள் உருவாகின. தகவல் பரிமாற்றத்துக்கு மிகவும் உதவும் வாட்ஸ்அப் செயலி வந்த பிறகு உரையாடல்கள் குறைந்தன. போனின் வருகைக்குப் பிறகு கடிதம் எழுதுவதும் நின்றுவிட்டது போன்று வாட்ஸ்அப் செயலி வந்த பின்னர், உரையாடல் குறைந்து எழுத்து வடிவில் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகின்றனர். குரல் வழியாக தகவல்களை அனுப்புவது எளிமையாக இருந்தாலும், எமோஜிக்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நமது உணர்வுகளை வெளிப்படுத்தவும், தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுவதை எளிமைப்படுத்தவும் எமோஜியை அறிமுகம் செய்தது வாட்ஸ்அப். அதன்பிறகு, எழுத்து மூலம் தகவல் பரிமாறப்படுவது குறைந்து, எமோஜிக்கள் மூலமே தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. உதாரணத்துக்கு ஓகே, சரி என்று கூற கட்டை விரலை உயர்த்திக் காட்டும் எமோஜியை நாம் பயன்படுத்துகிறோம். அன்பை தெரிவிக்கவும் விருப்பத்தை தெரிவிக்கவும் இதய எமோஜியையும், சிரிப்பை வெளிப்படுத்த சிரிக்கும் எமோஜியையும், நன்றி தெரிவிக்க இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவிப்பது போன்ற எமோஜியையும் பயன்படுத்துகிறோம்.

நமது தினசரி வாழ்க்கையை பல தருணங்களில் எமோஜிக்கள் மூலமாகவே கடந்துவிடுகிறோம். தொடக்கத்தில் சில எமோஜிக்களுடன் இருந்த வாட்ஸ்அப் தற்போது தொடர்ந்து புதுபுது எமோஜிக்களைப் பயனர்களின் வசதிக்காக சேர்த்து வருகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் அப்டேட் என வந்தால் நாம் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் புதிய எமோஜிக்களை நம்மால் வாட்ஸ்அப்பில் பயன்படுத்த முடியும். இதில், சமீபத்தில் எழுத்து வடிவில் தகவலை நாம் பெறும்போது அதற்கு அதை படிப்பவர்கள் ரியாக்ஷன் கொடுக்க ஏதுவாக சில எமோஜிக்களை சேர்த்துள்ளது வாட்ஸ்அப்.

பல்வேறு நாடுகளின் கொடிகள், பல்வேறு மதங்களின் குறியீடுகள், கைக்கடிகாரம், அலாரம், ஊசி, மாத்திரை, உணவுப் பொருட்கள் என பல எமோஜிக்கள் வாட்ஸ்அப்பில் உள்ளன. வாக்கிங் ஸ்டிக், நடக்க முடியாதவர்கள் பயன்படுத்தும் சக்கர நாற்காலி, அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் சுழலும் நாற்காலி என சில புதிய எமோஜிக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

நாய்க் குட்டி, பூனைக் குட்டி போன்ற உயிரினங்களின் முகங்களும், வித்தியாசமாக பறவையினங்களின் முகங்களும் எமோஜிகளாக கிடைக்கின்றன. கைகளைப் பயன்படுத்தி நாம் செய்யும் சைகைகளின் எமோஜிக்கள் ஏற்கனவே வாட்ஸ்அப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இதுவரை சேர்க்கப்படாத எமோஜிக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது பயனர்களுக்கு மிகவும் உதவும் வகையில் இருக்கின்றன. மேலும், எழுத்து வடிவிலான உரையாடல்களையும் இந்த எமோஜிக்கள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading