பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ திரைப்படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “இரவின் நிழல்”. ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் 36…

இயக்குநர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “இரவின் நிழல்”. ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் 36 வினாடிகள் ஓடக்கூடிய இந்தப் படம், முதன்முதலாக நான் லீனியர் முறையில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு உள்ளது. சவுண்ட் டிசைனர் கிரைக் மான், VFX நிபுணர் கட்டா லங்கோ லியோன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகிய 3 ஆஸ்கர் விருது பெற்றவர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

அகிரா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள, இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா சகா, அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்மையில் இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் ‘மாயவா தூயவா’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘இரவின் நிழல்’ படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.

மேலும், ‘இரவின் நிழல்’ படம் தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் 75வது கேன்ஸ் விழாவில் சர்வதேச திரைக்கலைஞர்கள் முன்னிலையில் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி ‘இரவின் நிழல்’ திரைப்படம் வரும் ஜூன் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.