#BabyJohn படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

“பேபி ஜான்” திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என வீடியோ வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அப்டேட் கொடுத்துள்ளது. சங்கரின் உதவி இயக்குநராக அறிமுகமாகி, இன்று பல ஹிட் திரைப்படங்களை இயக்கி வருபவர் பிரபல இயக்குநர்…

“பேபி ஜான்” திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என வீடியோ வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அப்டேட் கொடுத்துள்ளது.

சங்கரின் உதவி இயக்குநராக அறிமுகமாகி, இன்று பல ஹிட் திரைப்படங்களை இயக்கி வருபவர் பிரபல இயக்குநர் அட்லி. இவர் ‘ஜவான்’ திரைப்படம் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. தற்போது பாலிவுட்டில் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து “பேபி ஜான்” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தெறி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஹிந்தியில் தற்போது உருவாகி வருகிறது. அட்லியின் உதவி இயக்குநர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்து வருகின்றனர். மைக்கேல் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரண் கௌஷிக் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இதையும் படியுங்கள் : WomenTennisChampionship | செக் வீராங்கனையை வீழ்த்தினார் ஸ்வியாடெக்!

“பேபி ஜான்” என தலைப்பிடப்பட்ட இந்த படம் மே 31-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில பணிகள் முடியாத காரணத்தால் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 25 -ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு டீசர் குறித்த அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி, நாளை காலை 11 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.