முக்கியச் செய்திகள்

நியூஸ் 7 தமிழ் முன்னெடுக்கும் மற்றொரு அவதாரம்

நியூஸ் 7 தமிழ் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், உடல் நலம் குறித்த செய்திகளை வழங்க புதிதாக “நியூஸ் 7 தமிழ் ஹெல்த்” யூட்யூப் சேனலை நாளை முதல் தொடங்குகிறது.

 

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்,
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

திருவள்ளுவர் எழுதிய குறளில் மனிதனின் உடல் ஆரோக்கியத்தை கவனிப்பது மிகவும் அவசியம் என்று அப்போதே குறிப்பிட்டுள்ளார். ஒருவர் உடலில் உள்ள நோயைக் குணப்படுத்த வேண்டுமாயின் அது என்ன நோய் என்பதை அறிந்து. அந்த நோய் உடலில் எங்கு எப்படி உருவானது என்பதை ஆராய்ந்து அந்த நோயைக் குணப்படுத்தக் கூடிய மருத்துவத்தை அறிந்து அந்த மருத்துவத்தைப் பிழையில்லாமல் முறையாகச் செய்ய வேண்டும் என்பதை இந்த குறளின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

 

மனிதனுக்கு மிக அவசியமான ஒன்றானது உடல் நல ஆரோக்கியம். ஒரு மனிதன் நீண்ட ஆயுளைப் பெற்று இவ்வுலகில் வாழ வேண்டுமாயின், மனித உடலின் சீரான செயற்பாடுகளில் மிகவும் அக்கறையுடன் செயற்படுதல் வேண்டும். உடல்நலம் பேணும் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளை கடைப்பிடிப்பதோடு, உளத்திருப்தியோடு கூடிய தெளிந்த நீரோட்டம் போன்ற அமைதியான வாழ்க்கையை வாழுதல் அவசியமாகும்.

 

மனித உடலானது மரபணுக்கள் திசுக்கள், எலும்புத் தொகுதிகள், தசைப் பகுதிகள் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உடலிலும் தனித்தன்மையுடன் கூடிய நுண்ணிய கலங்களினால் உருவாக்கப்பட்ட மூளை, உடல் முழுவதும் ரத்தத்தைப் பாய்ச்சும் இதயம் மற்றும் சுவாச சுற்றோட்டத்திற்கு வழிவகுக்கும் நுரையீரல் ஆகியவற்றைக் கொண்டமைந்துள்ளது. இவ் உடலியல் செயற்பாடுகள் திறம்பட இடம்பெறுவதற்கு சீரான நலம் பேணலை கடைப்பிடித்தல் அவசியமாகும்.

இவ்வாறு மனித வாழ்க்கைக்கு முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் உள்ள உடல் நல வளத்தை பற்றி அறிந்திடவும், உடல் நலத்தை பேணி காக்கவும் உதவிடும் வகையில் நமது நியூஸ் 7 தமிழ் தனது அடுத்த அவதாரத்தை எடுத்துள்ளது. ஏற்கனவே, நியூஸ் 7 தமிழ் சார்பில் பக்தி யூட்யூப் சேனல் தொடங்கி ஆன்மீக அன்பர்களுக்கு தேவையான ஆலய வழிபாடுகளையும், தெய்வ சொற்பொழிவுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

 

பின்னர் நாட்டின் முதுகெழும்பாக செயல்படும் விவசாயிகளின், தோழோடு தோழனாக நியூஸ் 7 தமிழ் அக்ரி யூட்யூப் சேனலை தொடங்கி வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது. நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்த பக்தி யூட்யூப் சேனலுக்கும், அக்ரி யூட்யூப் சேனலுக்கும் மக்கள் தனி ஆதரவை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், உங்கள் நியூஸ் 7 தமிழ் அடுத்ததாக ஹெல்த் யூட்யூப் சேனலை தொடங்குகிறது. நியூஸ் 7 தமிழ் ஹெல்த் யூட்யூப் சேனல் நாளை முதுல் தொடங்கப்படுகிறது.

 

சென்னை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இதன் தொடக்க நிகழ்ச்சி நாளை ( செவ்வாய்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. வேண்டாம் போதை என்ற கல்லூரி மாணவர்களின் பிரமாண்ட உறுதியேற்பு நிகழ்ச்சியுடன் ஹெல்த் யூட்யூப் சேனல் தொடங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், நியூஸ் 7 தமிழின் மேலாண் இயக்குநர் வை.சுப்பிரமணியன், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சாய்ராம் கல்வி குழுமத்தின் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து, இருதய அறுவை சிகிச்சை மூத்த நிபுணர் தில்லை வள்ளல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

 

பொறுப்பும், பொதுநலனும் என செயல்படும் நியூஸ் 7 தமிழ், மக்களுக்கான செய்திகளை மட்டும் வழங்குவதோடு, நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் முயற்சியால் தேவையான விழிப்புணர்வுகளையும் கொடுத்து வருகிறது. இது அரசு தரப்பிலும், மக்கள் தரப்பிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. செய்திகள் மட்டுமே தனது பணி என கடந்து செல்லாமல் மக்களோடு உடன் நின்று, அவர்களின் மகிழ்ச்சிக்கும், துக்கத்திற்கும் துணை நிற்கும் நியூஸ் 7 தமிழ்க்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு அதிகரித்து வருவது மகிழ்ச்சியை தருகிறது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

Jeba Arul Robinson

சிம்புவின் திரைப்படங்கள் திட்டமிட்டு முடக்கப்படுகிறது: டி.ராஜேந்தர்

G SaravanaKumar

விக்ரமின் ’கோப்ரா’ படத்தில் நடிக்கும் இர்பான் பதான்!

Niruban Chakkaaravarthi