முக்கியச் செய்திகள் தமிழகம்

வேளாங்கண்ணி திருவிழா – பொதுமக்கள் கடலில் குளிக்க தடை

வேளாங்கண்ணி திருவிழாவின் போது கடலில் பொதுமக்கள் குளிக்க தடை என்றும் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற
உள்ளது. இந்நிலையில், திருவிழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, கோட்டாட்சியர் முருகேசன், பேரூராட்சி தலைவர் சர்மிளா டயானா, பேரூராட்சி செயலாளர் பொன்னுசாமி மற்றும் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், உலகப் புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா இம்மாதம் 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் அங்கு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றார்.

திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை விரிவாக செய்திட வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன் என கூறினார்.

 

வேளாங்கண்ணி திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும் திருவிழா நாட்களில் வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்த்திடும் பொருட்டு கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அருண் தம்புராஜ் விளக்கமளித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்த 7 அம்ச திட்டங்கள்; மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தகவல்!

Saravana

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் வேல்ராஜ் நியமனம்

Jeba Arul Robinson

பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்? : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

Saravana