`இப்போலாம் சட்டம் ஆளுக்கேத்த மாதிரி வலையும், நெளியும்’ – வெளியானது #Vettaiyan படத்தின் Unseen வீடியோ!

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடித்து படத்தில் இடம்பெறாத காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம்…

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடித்து படத்தில் இடம்பெறாத காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு கடந்த அக்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

என்கவுன்ட்டர் குறித்து பேசியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முன்னதாக இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மனசிலாயோ, ஹண்டர் வன்ட்டார் ஆகிய பாடல்கள் வெளியாகி இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது.

இத்திரைப்படம் வெளியான 9 நாட்களில் ரூ. 225 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடித்து படத்தில் இடம்பெறாத காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.