மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவுக்கு இன்று பிறந்தநாள். 62வது வயதை எட்டியுள்ள அவருக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் அமித் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பணியாற்றிட எனது வாழ்த்துகள்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் தனது எக்ஸ் பக்கத்தில் அமித் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட ஆயுளுடனும் திகழவும், தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்திற்குச் சேவை செய்யவும் வாழ்த்துகிறேன். நமது மகத்தான தேசத்தின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கான உங்கள் முயற்சிகளில் உங்களுக்குத் தொடர்ந்து வலிமையும் வெற்றியும் கிடைக்கட்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் தனது எக்ஸ் பக்கத்தில் அமித் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “இன்றைய தினம் பிறந்த நாள் காணும் மத்திய உள்துறை அமைச்சர் இந்தியாவின் அரசியல் சாணக்கியர் அமித் ஷாவுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து சிறந்த ஆரோக்கியத்துடன் பாரத மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரனும் தனது எக்ஸ் பக்கத்தில் அமித் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பதிலும் அவர் ஆற்றி வரும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகள் மிகவும் போற்றத்தக்கவை. அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் திகழவும், மக்கள் மற்றும் தேசத்திற்குத் தொடர்ந்து வலுவான சேவையாற்றவும் இறைவனை வேண்டுகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




