பாடப்புத்தகங்களில் மத்திய அரசுக்கு பதிலாக ஒன்றிய அரசு என மாற்றம் இல்லை, என்று தமிழ்நாடு பாடநூல் & கல்வியியல் பணிகள் கழக தலைவர் லியோனி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கு ஏற்ப, பள்ளிப் பாடப்புத்தகங்களில் மாநில அரசுகள் மாற்றங்களை மேற்கொள்ளும். அதன்படி, இந்த ஆண்டு தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில், மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக ஒன்றிய அரசு என்று மாற்றுதல், கருணாநிதியின் செம்மொழி பாடலை புகுத்துதல், ஆளுநரின் அதிகாரங்கள் பற்றிய குறிப்பில் திருத்தல் செய்தல் போன்ற மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்தது.
அண்மைச் செய்தி: ‘‘பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 1,300 கோடி’ – அமைச்சர் அன்பில் மகேஷ்’
இந்நிலையில், வரும் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என பாடநூல் கழக தலைவர் லியோனி தெரிவித்தார். மேலும், 2022-2023ஆம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுவிட்டதாகவும்,
2023-2024ஆம் கல்வியாண்டுக்கான புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனத்தின் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், திருத்தம் இருப்பின் அது, 2023-2024ஆம் கல்வியாண்டில் அமலாக வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








