ஆங்கிலத்தில் பின்னோக்கி தட்டச்சு செய்து அசத்திய இளைஞர் | வீடியோ வைரல்!

3 வினாடிகளுக்குள் ஆங்கில எழுத்துக்களை பின்னோக்கி தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு இளைஞர். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் அசாதாரண சாதனையை உருவாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.  கிளிப்பில், …

3 வினாடிகளுக்குள் ஆங்கில எழுத்துக்களை பின்னோக்கி தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு இளைஞர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் அசாதாரண சாதனையை உருவாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.  கிளிப்பில்,  அவர் ஒரு கணினியில் ஆங்கில எழுத்துக்களை பின்னோக்கி தட்டச்சு செய்கிறார்.  அதை வெறும் 2.88 வினாடிகளில் செய்து சாதனை படைத்தார்.

கிட்டத்தட்ட கண் இமைக்கும் நேரத்தில் எழுதி முடித்துவிடுகிறார். சுமார் 12 மணி நேரத்திற்கு முன்பு பகிரப்பட்ட வீடியோ 7.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது – மேலும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பகிர்வுக்கு எதிர்வினையாற்றும்போது மக்கள் பலவிதமான கருத்துக்களைப் பதிவு செய்தனர். பெரும்பாலானோர் சாதனையால் ஈர்க்கப்பட்டாலும், சிலர் அதை முறியடிக்க முடியும் என்று கூறினர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.