ஐ.நா. தலைமையகத்தில் இன்று யோகா தின சிறப்பு நிகழ்ச்சி : பிரதமர் மோடி பங்கேற்பு

அமெரிக்காவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று யோகா தின நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று…

அமெரிக்காவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று யோகா தின நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று முதல் 23-ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்பார்.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்க உள்ளார். இதற்காக, நியூயார்க் சென்றடைந்த அவருக்கு, இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்

யோகா தின நிகழ்ச்சிகளுக்கு பிறகு வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திலும் உரையாற்றுகிறார். இதன்மூலம், அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையை மோடி பெறவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர், நாளை , அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். இதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதில் இந்தியா-அமெரிக்கா இடையிலான தொழில், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.