முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

சிவாவை உதயநிதியிடம் மாட்டிவிட்ட இயக்குநர்!

லைகா புரொடெக்‌ஷன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளங்கள் நடிக்கும் டான் திரைப்படம் வரும் 13ம் தேதி திரைக்கு வருகிறது. பள்ளி, கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் ‘ஜலபுல ஜங்கு’ பாடல் வெளியாகி ஏற்கனவே மாணவர்களை ‘vibe’ செய்யத் தொடங்கியுள்ள நிலையில் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இப்படத்தை வாங்கி வெளியிடும் நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘உண்மையா இப்போ சினிமாவோட ‘டான்’ன்னா அது சிவா தான்’ என பாராட்டியதோடு ‘சிவா வச்சதுதான் சட்டம்’ எனக்கூறி கலாய்க்கவும் செய்தார். சட்டென ஜெர்க் ஆன சிவ, ‘இருக்கையில் இருந்து எழுந்து ‘ஏன் சார்!!’ என்பது போல் வணக்கம் வைத்தார். ‘அதுக்காக ட்ரெயிலர்லாம் அப்படி ஒரு டயலாக் வச்சீங்க பாத்தியா’ எனக்கூறி சிரித்தார்.. உடனே சிவா, ‘அய்யா எனக்கு அதுக்கும் சம்பந்தம் இல்லைங்கய்யா’ என்பது போல் கையசைத்து இயக்குநரை கைகாட்டினார்.உதயநிதி மேடையேறுவதற்கு முன்பே டான் படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில், ‘நான் போலீஸ் ஆயிடவா?, மீம் கிரியேட்டர் ஆகிடவா, டான்ஸர் ஆகிடவா..?’எனக்கேட்டுக் கொண்டே கடைசியாக ‘பேசாம நான் அரசியல் வாதியாகிடவா’ என கேட்பார். படத்தில் சிவாவின் நண்பராக நடிக்கும் மிர்ச்சி சிவா, ‘அதுக்கு பொய்யெல்லாம் பேசனும்பா’ எனக்கூற ‘அப்ப வேணாம்’ என சிவா பதிலளிப்பது போல் காட்சிகள் வரும். இந்த ட்ரெயிலர் ஓடும்போதே, உதயநிதி அருகில் அமர்ந்திருக்கும் சிவாவை திரும்பி பார்க்க, on the spot-லேயே காமெடியாக தன்னிலை விளக்கம் கொடுத்தார் சிவா என்பது குறிப்பிடத்தது.

மேலும் பேசிய உதயநிதி, ‘அதேமாதிரி சினிமால ரெண்டு ‘டான்’ ஒன்னு சிவா, இன்னொனு அனிருத் தான் என ஒரு போடு போட்டார். இதைத்தான் இசை ரவுடி அனிருத் என்று நாம் கட்டுரையாக வடித்திருந்தோம். உதயநிதி அதை படித்திருக்கக்கூடும் என்று நினைக்கிறோம். மேலும் பேசிய உதயநிதி, ‘ இவங்க ரெண்டு பேருமே செஞ்ச பாட்டு எல்லாமே சூப்பர் ஹிட். கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரீ-ரிக்காடிங் இல்லாமையே பாத்தேன் அப்பவே ரொம்ப புடிச்சது. கண்டிப்பா சிவா வோட டாக்டர் படத்தை விட இது மிகப்பெரிய வெற்றி ஆகும்ன்னு நம்புறேன். படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள். லைக்கா நிறைய படம் பண்ணணும்..அதை எங்களுக்கே கொடுக்கணும்’ என்று அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் புக்கிங்கை செய்தார். பேசிவிட்டு விழாவில் இருந்து மகிழ்ச்சியாக கிளம்பிவிட்டார் உதயநிதி.

இதன்பிறகு மேடைக்கு அழைக்கப்பட்ட சிவா படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்ததோடு, சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, முனிஸ்காந்த் உள்ளிட்டோர்கள் போல் மிமிக்ரி செய்து கைத்தட்டல்களை வாங்கினார். நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய பேட்டைக்காரனாக சிவாவை பார்த்த மகிழ்ச்சி அனைவரிடத்திலும் வெளிப்பட்டது. இதன்பிறகு அந்த அரசியல் எண்ட்ரி குறித்த கவுண்டருக்கு விளக்கம் கொடுத்தார் சிவா.

அப்போது பேசிய சிவா, ‘உதயநிதி சார், நீங்க வந்து விழாவை சிறப்பிச்சதுக்கு ரொம்ப நன்றி சார்! ட்ரெய்லர்ல வந்த கடைசி டைலாக் முழுக்க முழுக்க கற்பனை சார்.. இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது சார். இந்த ட்ரெயிலர கட் பண்ணும் போது, உங்க முன்னாடி உக்காந்து பாப்பேன்னு நினைச்சிக்கூட பாக்கல சார். இல்லண்ணா அந்த டைலாக் மட்டும் எடுத்துடுங்கன்னு சொல்லிருப்பேன். இது ஜாலியா இருக்கும்னு நினைச்சி வச்சதுதான், but சாரும் அதை ஜாலியாதான் எடுத்துக்கிட்டாரு’ எனக்கூறியதோடு, ‘சிபி… இது மட்டும் பண்ணாம இருந்திருக்கலாம்’ எனக்கூறி இயக்குநரை செல்லமாக கண்டிப்பதுபோல் கலாய்த்தார்.

வீட்டுக்கு போய் இந்த வீடியோவை பார்த்த உதயநிதி, ‘நீங்க ஜாலி பன்னி ஜிம்காணா ஆகுறதுக்கு, நான் தான் கிடைச்சனா!’ என்றுகூட நினைத்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் மீது அப்செட் ஆன உதயநிதி எனும் thumbnail-ஓடு யூ-டியூப்பில் வீடியோக்கள் பறக்க தொடங்கியது. பொதுவாக உதயநிதி இதுபோலான சம்பவங்களை பர்சனலாக எடுத்துக்கொள்ளாமல், ஜாலியாக கையாள்வது வழக்கம். எனவே இந்த சம்பவத்தையும் அப்படிதான் எடுத்து கொண்டார் என உதயநிதி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

  • வேல் பிரசாந்த்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடுவானில் தகராறில் ஈடுபட்ட விமான பயணி!

EZHILARASAN D

முதியவரை தாக்கிய நடத்துனர்: மனித உரிமை ஆணையம் எடுத்த நடவடிக்கை!

EZHILARASAN D

பனிக்கட்டியாக உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி!!!

Jayasheeba