இந்தியா அளவில் 4,03,738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,092 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,03,738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை நாடு முழுவதும் 2,22,96,414 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்றைய தினத்தில் 4,092 பேர் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,42,362 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் 3,86,444 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இதுவரை 1,83,17,404 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 37,36,648 பேர் கொரொனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.




