உலகின் முன்னணி நிறுவனமான உபர் 25 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசும் மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. டாடா மோட்டார்ஸின் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையை தனது வசமாக்கி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் டாக்ஸி பகிர்வு சேவையை வழங்கிவரும் முன்னணி நிறுவனமான உபெர் நிறவனம் 25000 எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக உபெர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மைச் செய்தி: நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை – பின்னணி என்ன?
இதுதொடர்பாக உபெர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிரப்ஜித் சிங் கூறுகையில், ”டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் மேம்படுத்துவதற்கு இது உதவியாக இருக்கும். எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிப்பதில் உபெர் முக்கிய பங்கு வகிக்கும்” என்று கூறினார்.