விண்வெளியிலிருந்து பூமியில் உள்ள மகனுடன் பேசிய தந்தை: வீடியோ வைரல்!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் தனது மகனுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்தவர் சுல்தான் அல் நெயாடி. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த…

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் தனது மகனுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்தவர் சுல்தான் அல் நெயாடி. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணியில் உள்ளார். இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முகமது பின் ரஷித் (எம்பிஆர்) விண்வெளி மையம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.

அதில் சர்வதே விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுல்தான் அல் நெயாடி பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ காலில் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. அப்போது தந்தையிடம் பூமியில் உங்களுக்கு பிடித்த விஷயம் என மகன் கேட்கிறார்.

அதற்கு நீ தான் என பதில் அளிக்கிறார். மேலும் பூமியில் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே போல் தான் நாங்களும் இங்கு அனைத்து வசதிகளுடன் இருக்கிறோம் என கூறினார்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி பகிரப்பட்ட இந்த பதிவை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். எங்களையும் தொடர்பு கொண்டு பேசுங்கள் என குறும்பு நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.