பிலிப்பைன்சை தாக்கிய கல்மேகி புயல் – உயிரிழப்பு எண்ணிக்கை 188ஆக உயர்வு!

பிலிப்பைன்சை தாக்கிய கல்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 188ஆக உயர்ந்துள்ளது.

பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக கால்மேகி என்று புயல் தாக்கியது. சூறாவளியால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பிலிப்பைன்ஸின் பல பகுதிகளில் சாலை, மின்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்குள்ள பாலவான் தீவு அருகே கல்மேகி புயல் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது.

அப்போது மணிக்கு 220 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளது. கனமழையால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குப்பைமேடு போல ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்துள்ளது.

இதனிடையே பிலிப்பைன்சை தாக்கிய கல்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 142 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி இருந்ததால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மீட்பு பணியில் 100-க்கும் மேற்பட்டோர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.