முக்கியச் செய்திகள் தமிழகம்

விடுதலைப் புலிகள் போல் ஆயுதம் ஏந்தி போராட துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்

சேலம் அருகே யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்ட 2 இளைஞர்கள், விடுதலைப் புலிகள் போல் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம், சேலம் மாநகர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களை போலீசார் மடக்கி விசாரணை நடத்தினர். பிடிப்பட்டவர்கள், முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் முழு விபரங்களை சேகரித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, அவர்கள் இருவரும் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த நவீன் சக்ரவர்த்தி மற்றும் செவ்வாய் பேட்டை பகுதியை சேர்ந்த சஞ்சை பிரகாஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் சேலம் செட்டி சாவடி பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர். இவர்கள் வைத்திருந்த பைகளில் துப்பாக்கி தயாரிப்பதற்கான உதிரிபாகங்களை கண்டுபிடித்த போலீசார், அவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான, நவீன கருவிகள் மற்றும் சக்திவாய்ந்த வெடிமருந்துகளையும் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மலைகள், கல் குவாரிக்காக வெடி வைத்து தகர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் இயற்கை சீரழிந்து வருவதாலும். வருங்கால தலைமுறை மிகுந்த துன்பத்திற்கும் ஆளாகக்கூடும் என்பதாலும். பணத்திற்காக, இயற்கைகைய சீரழப்பவர்களை வேரோடு அழிக்க வேண்டும் என அந்த இளைஞர்கள் முடிவெடித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதற்காக கல் குவாரிகளில் மலைகளை உடைக்க பயன்படுத்தும் வெடி மருந்துகளை கள்ள மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு, வாங்கிவந்து வெடி பொருளாக தயாரித்துள்ளனர். குவாரிகளில் இருந்து கற்களை ஏற்றி வரும் லாரிகளை வெடி வைத்து தகற்கவும், கல் குவாரி உரிமையாளர்கள் மற்றம் இதற்கு ஆதரவாக இருப்பவர்களை சுட்டு கொள்ளவும் அவர்கள் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக யூடியூபில் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பது குறித்து பார்த்து, துப்பாக்கிகள் தயாரித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருவரையும், வெடிபொருள் சட்டத்தின் கீழ் கைது செய்த ஓமலூர் போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்களை போலீசார் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த போது, இவர்களுக்கு துணையாக இருந்த சேலம் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்த கபிலன் என்ற பட்டதாரி இளைஞரையும் போலீசார் கைது செய்தனர். இந்த விவாகரம் குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தியதில் கைதான 3 இளைஞர்களும் பெரிய அளவிலான சதித்திட்டங்கள் தீட்டியது தெரியவந்தது. இலங்கையில் இருந்த விடுதலை புலிகள் அமைப்பு, போல ஆயுத போரட்டம் நடத்தும் அமைப்பை உருவாக்க திட்டமிட்டதும் விசாரணையில் அம்பலமானதாகக் கூறப்படுகிறது. இயற்கை மற்றும் தமிழ்மொழிக்கு எதிரானவர்களை தீர்த்துக்கட்ட அந்த இளைஞர்கள் ஆயத்தமானதாகக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து இந்த வழக்க  தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. கடந்த 25ம் தேதியன்று தேசிய புலானாய்வு அமைப்பு, வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்டு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அந்த முதல் தகவல் அறிக்கையில் அந்த  இளைஞர்களின் திட்டங்கள் குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்கள் தீட்டியிருந்த திட்டங்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“அரசாங்கத்தின் அதிகாரங்கள் மக்களை காக்கவே பயன்பட வேண்டும்”: வெற்றிமாறன்

Jeba Arul Robinson

நீட் தேர்வு, 1 கோடி தடுப்பூசிகள்; பிரதமரிடம் முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகள்

EZHILARASAN D

தாராபுரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலை

Halley Karthik