முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீரில் போலீஸ் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் பலி

ஜம்மு காஷ்மீரின் துலிபால் பகுதியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வாரம் காவல்துறையினர் நடத்திய என்கவுன்டர் தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதில் 3 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஐஜி தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேபோல புல்வாமா பகுதியில் ஒருவரும், குல்காம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லக்ஷர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேபோல புல்வாமாவின் சத்போரா பகுதியிலும், குல்காமின் டிஎச் போரா பகுதியிலும் சோதனை நடவடிக்கை தொடரந்து வருகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக சமீபத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணமாக வந்திருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சமூக கட்டமைப்பை உடைக்க சமூக விரோத சக்திகளை அனுமதிக்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியதோடு, வரும் மாதங்களில் தேர்தல் செயல்முறை தொடங்கும் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் தற்போது காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் நடத்தி வரும் தொடர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனது விவாகரத்து குறித்து மனம் திறந்த பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பா!

Jeba Arul Robinson

வேகமாக பரவும் ஒமிக்ரான்: முதலமைச்சர் இன்று ஆலோசனை

Ezhilarasan

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு: அமைச்சர் விளக்கம்

Ezhilarasan